உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. மொத்தம் 19,மூட்டைகள் வரப் பெற்றது. அதிக பட்சமாக கிலோ,205.19,க்கும், குறைபட்சமாக ரூ.162,க்கும், சராசரியாக ரூ.183.59,க்கு ஏலம் போனது. 9.33,குவிண்டால் வரத்தானது.மொத்தம் 1,45,499, ரூபாய்க்கு ஏலம் போனது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 200 மூட்டை காய்ந்த நிலக்கடலைக்காய் கொண்டு வரப்பட்டது. இதில், ஒரு கிலோ 68 முதல் 85 ரூபாய்க்கு என, 50 குவிண்டால் 3.56 லட்சத்துகு விற்றது.* பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 300 தேங்காய் வரத்தாகி, கிலோ, 35.50 - 54.10 ரூபாய்; நெல், 35 மூட்டை வரத்தாகி, கிலோ, 20.04 - 27.20 ரூபாய்; நிலக்கடலை, 143 மூட்டை வரத்தாகி, கிலோ, 67.59 - 76.29 ரூபாய்; எள் ஒன்பது மூட்டை வரத்தாகி, 101.91 - 116.91 ரூபாய்க்கு விற்றது.* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனையானது. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில், கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தது. கால்நடைகளில், 80 சதவீதம் விற்றன.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 200 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 68 முதல், 85 ரூபாய் என, 50 குவிண்டால், 3.56 லட்சத்துகு விற்றது.* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 50 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 187.79 - 205 ரூபாய், இரண்டாம் தரம், 121.89 - 183 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 1,537 கிலோ கொப்பரை, இரண்டு லட்சத்து, 73,226 ரூபாய்க்கு விலை போனது. மேலும், 37,000 தேங்காய் வரத்தானது. கருப்பு காய் கிலோ, 50.89 - 62.89 ரூபாய், பச்சை தேங்காய், 42.32 - 56.90 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 66.69 ரூபாய் என, 13,222 கிலோ தேங்காய், ஏழு லட்சத்து, 1,973 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்ந்து, ஒன்பது லட்சத்து, 75,199 ரூபாய்க்கு விற்றது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், ஒரு கதளி ஒரு கிலோ, 49 ரூபாய்க்கும், நேந்திரன், 32 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 960, தேன்வாழை மற்றும் பூவன், தலா 510 ரூபாய்க்கு விற்பனையானது. ரஸ்த்தாளி தார், 560, மொந்தன், 260, ரொபஸ்டா, 400, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,180 வாழைத்தார்களும், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை