உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேனில் ரேஷன் அரிசி கடத்திய மொடக்குறிச்சி ஆசாமி கைது

வேனில் ரேஷன் அரிசி கடத்திய மொடக்குறிச்சி ஆசாமி கைது

ஈரோடு : மொடக்குறிச்சி, தண்ணீர் பந்தல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக, போலீசாருக்கு தகவல் போனது. இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஒரு ஆம்னி வேனில், 16 மூட்டைகளில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிந்தது. வேனிலிருந்தவர் மொடக்குறிச்சி, கண்ணுடையாம்பாளையம் செந்தில்குமார், 45, என தெரிந்தது. அவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை