உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

காங்கேயம் நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி

காங்கேயம், காங்கேயம் நகராட்சியில், கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.காங்கேயம் நகராட்சியில், 18 வார்டுகளில், 15 ஆயிரம் வீடுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த வாரத்தில் மழை பெய்ததால் கழிவுநீர் தோங்கியதால் கொசு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாலை முதல் விடியும் வரை கொசுக்கள், மக்களை பாடய்படுத்தி வருகிறது. இந்நிலையில் மழைக்கால கொசு உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்தது. தெரு மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதி, பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இதில்லாமல் நகராட்சியில் வீதி தோறும் வாகனத்தில் சென்றும், தொழிலாளர்கள் மருந்து அடித்து வருகின்றனர் என்று நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை