உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ஈரோடு: ஈரோடு எம்.பி., பிரகாஷ், டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினார். மனுவில் கூறியதாவது: தேசிய அளவில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். முதியோர் ரயில்வே பயணத்துக்கான கட்டண சலுகை அளிப்பது, அவர்க-ளுக்கு பயன் தருவதாக அமையும். எனவே மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகையை அறிவித்து அமல்படுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ