உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகப்பாளையம் அரசு பள்ளி ஆண்டு விழா

நகப்பாளையம் அரசு பள்ளி ஆண்டு விழா

கொடுமுடி : கொடுமுடி நகப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. கொடுமுடி பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்ரமணியம் தலைமை வகித்தார். துணைதலைவர் ராஜா கமால்ஹசன், பி.டி.ஏ., பொருளாளர் மணி முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் கமலா, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ