உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி 15வது விளையாட்டு விழா

நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி 15வது விளையாட்டு விழா

ஈரோடு: ஈரோடு நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின், 15வது விளையாட்டு விழா பீட்ஸ்-24 நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி உடற்கல்வி ஆசிரியை தர்ஷினி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனை நகுல லட்சுமி நாராயணன் வகாஷியாவை வரவேற்றார். சிறப்பு விருந்தினர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நிர்வாக மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை