உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தரமற்ற உணவு பொருள் பேக்கரிகளுக்கு அபராதம்

தரமற்ற உணவு பொருள் பேக்கரிகளுக்கு அபராதம்

பெருந்துறை:பெருந்துறை உணவு பாதுகாப்பு துறையினர், பானிபூரி, பேக்கரி மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். இதில் பவானி ரோட்டில் ஒரு பேக்கரி, தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேக்கரியில், தரமற்ற உணவுப்பொருள் விற்றது தெரிந்தது. இரு கடைகளுக்கும் தலா,1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். குன்னத்துார் ரோட்டில் ஒரு பேக்கரியில் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் காலாவதி ரொட்டி மற்றும் மிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பவானி ரோட்டில் ஒரு தள்ளுவண்டி கடையில், பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தியது தெரிந்து பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். தரமில்லாத உணவு பொருள் விற்பனை குறித்து, 94440-42322 என்ற எண்ணில், மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்