உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்

பெரிய மாரியம்மன் கோவில் கம்ப ஊர்வலம் திட்டமிட்டபடி நடக்கும்

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் நடப்பாண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதில் கம்பம் எடுக்கும் விழா நாளை மதியம், 3:௦௦ மணிக்கு நடக்கும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், லோக்சபா தேர்தலால், கம்பம் எடுக்கும் விழா, அதிகாலை, 5:௦௦ மணிக்கு நடக்கும் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.இந்த தகவல் வதந்தி என்றும், திட்டமிட்டப்படி நாளை மதியம், 3:௦௦ மணிக்கு கம்பம் ஊர்வலம் நடக்கும் என்று, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து துறை அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். திட்டமிட்டப்படி நாளை மதியம், 3:௦௦ மணிக்கு கம்பம் ஊர்வலம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை