உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் பொங்கல் விழா

ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு: ஈரோடு மாணிக்கம்பாளையம் ஆண்டிக்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற ஆகாச கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. பிறகு சுவாமிக்கு பொங்கல் படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று காலை மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.* ஈரோடு, சூளையில் உள்ள பிரசித்தி பெற்ற சேமூர் முனியப்பன் கோவிலில் பொங்கல் விழா நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை