உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் கிணற்றில் பிணமாக மிதந்த பூசாரி

கோவில் கிணற்றில் பிணமாக மிதந்த பூசாரி

ஈரோடு:சிவகிரி, தாண்டாம்பாளையம், கொல்லன்கோவில் கிழக்கு வீதியை சேர்ந்தவர் வஜ்ரவேல், 63; தாண்டம்பாளையம், காமாட்சியம்மன் கோவில் பூசாரி. கடந்த, 7ம்தேதி கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விட்டு வெளியேறியவர் அதன் பின் மாயமானார். நேற்று முன் தினம் கோவில் கிணற்றில் வஜ்ரவேல் சடலம் மிதந்தது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். கிணற்றில் மீன்களுக்கு பிரசாதத்தை வீசும்போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, சிவகிரி போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ