உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு

வாலிபரிடம் மொபைல் பறித்த கும்பலுக்கு காப்பு

ஈரோடு:திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் பிரபாகரன், 34; சொந்த வேலையாக ஈரோட்டுக்கு வந்தார். வேலை முடிந்து திருப்பூர் செல்ல, நள்ளிரவில் கனிராவுத்தர்குளம் பஸ் நிறுத்த பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், பிரபாகரனை கட்டையால் தாக்கி, மொபைல்போனை பறித்து தப்பியது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக ஈரோடு, பவானி சாலை, பாவேந்தர் நகர் லட்சுமணன் மகன் லோகேஷ், 20; தென்றல் நகர் இரண்டா-வது வீதி ரவி மகன் ஜோதிமணி, 24; மாணிக்கம்பாளையம், காவிரி நகர் ஏழாவது வீதி மதியழகன் மகன் சூரிய பிரகாஷ், 22; வீரப்பன்சத்திரம், ஈ.பி.பி.நகர், ஜனதா காலனி சாமிநாதன் மகன் தேவராஜ், 21, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ