உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் கொட்டிய மழை

ஈரோட்டில் கொட்டிய மழை

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 4:00 மணியளவில் வானம் திடீரென மேகமூட்டமாக மாறியது. அதை தொடர்ந்து, 4:30 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதே வேகத்தில் அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதன்பின் வேகம் குறைந்து சாரலாக மாறி, 15 நிமிடத்தில் நின்றது. மீண்டும் இரவு, 7:00 மணிக்கு தொடங்கி, 20 நிமிடம் பெய்தது. மழையால் சாலையில் பள்ளமான இடங்களில், குளம்போல் மழை நீர் தேங்கியது.* பெருந்துறையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு தொடங்கிய கனமழை, அரை மணி நேரம் அதே வேகத்தில் கொட்டித்தீர்த்தது. இதனால் இரவில் சூடு தணிந்து, குளிர் காற்று வீசியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்