உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக நேதாஜி ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, சிவசண்முகம் வீதி, முத்துரங்கம் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அண்ணாஜி வீதியில் சாக்கடை மீது கட்டியிருந்த ஜவுளி கடையை அகற்ற முயன்றனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடை வியாபாரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சென்ற டவுன் போலீசார் வியாபாரிடம் பேசியதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை