உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மீண்டும் ஆகாயத்தாமரை அகற்றம்

வாய்க்காலில் மீண்டும் ஆகாயத்தாமரை அகற்றம்

பவானி, மேட்டூர் அணையில் இருந்து வலது கரை வாய்க்காலில், கடைமடை பகுதிகளில் வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற, பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் அகற்றினர். இந்நிலையில் வலது கரை வாய்க்காலில் வரும் ஜனவரி, 15ம் தேதி வரை, நீர் வழங்க நீட்டிப்பு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் வலது கரை வாய்க்காலில், குறிச்சி, கல்பாவி, கேசரி மங்கலம் மற்றும் மயிலம்பாடி பகுதிகளில் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. இதனால் நீரோட்டம் குறைந்து நீர் தேங்குகிறது. நீரோட்டத்தை அதிகப்படுத்தும் விதமாக, ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை