உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,831 வழக்குகளுக்கு தீர்வு

1,831 வழக்குகளுக்கு தீர்வு

ஈரோடு:ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா தலைமை வகித்தார். சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஸ்ரீவித்யா ஏற்பாடுகளை செய்திருந்தார். சிறப்பு மாவட்ட நீதிபதி சரவணன் பங்கேற்றார்.மாவட்ட அளவில் நீதிபதிகள் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன், ரவி, முருகன், சபீனா,அஸ்வக் அகமத், ஸ்ரீதேவி, விஜயகுமார், மதிவதணி வணங்காமுடி தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஏழு தாலுகாவில், 1,943 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 28 கோடியே, 91 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,831 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. * கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சார்பு நீதிபதி பாலக்கிருஷ்ணன் தலைமையில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில், 5.86 கோடி ரூபாய் மதிப்பில், 404 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நீதிபதிகள் சுவேதாரண்யன், தாயுமானவர், ருத்ரவாசுகி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை