உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓய்வு துணை ராணுவ வீரர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

ஓய்வு துணை ராணுவ வீரர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

ஈரோடு, ஈரோடு, சாஸ்திரி நகர், கருப்பண்ணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் மோகன்தாஸ், 65; துணை ராணுவ படை முன்னாள் வீரர். நேற்று முன்தினம் இரவு பைக்கில் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நால்ரோடு சந்திப்பில் சாலையை கடக்க முற்பட்டார். அப்போது தன்னை கடந்த லாரியின் பின்புற வழியாக வேகமாக செல்ல முயன்றபோது லாரி பின்புறத்தில் பைக் லேசாக மோதியது. இதில் தடுமாறி பின் சக்கர பகுதியில் விழுந்ததில் அவர் தலை மீது ஏறியது. இதில் சம்பவ இடத்தில் பலியானார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், லாரி டிரைவர் கோவிந்தராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை