உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடுத்தவர் கணக்கிலிருந்து பணம் லபக்: ஏ.டி.எம்.,மில் நூதனமாக திருடியவர் கைது

அடுத்தவர் கணக்கிலிருந்து பணம் லபக்: ஏ.டி.எம்.,மில் நூதனமாக திருடியவர் கைது

மும்பை: மும்பையில் வங்கி ஏ.டி.எம்., ஒன்றில் மற்றொரு நபரின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டு, அவரது கணக்கிலிருந்து, நூதனமாக பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். மும்பையை சேர்ந்தவர் பங்கஜ் பிரமோத் வைத்யா. சமீபத்தில் அங்குள்ள வங்கி ஏ.டி. எம்.,க்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு பாதுகாவலர் யாரும் இல்லை. வைத் யா உள்ளே நுழைந்தபோது, அவருடன் மற்றொரு நபரும் நுழைந்தார்.  அப்போது வைத்யா,"நான் பணம் எடுத்து விட்டு வரும் வரை, வெளியில் இருங்கள். அதற்கு பின் நீங்கள் பணம் எடுக்கலாம்' என்றார்.

அதற்கு அந்த நபர்,"நான் பணம் எடுப்பதற்காக வரவில் லை. ஏ.டி.எம்., செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வங்கியால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர். எனவே, நீங்கள் தயங்காமல் பணம் எடுக்கலாம்' என்றார். வைத்யா பணம் எடுக்கும் வரை, அவரின் அருகிலேயே அந்த நபரும் நின்று கொண்டிருந்தார். பணம் எடுத்து விட்டு வெளியில் சென்ற வைத்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வெளியில் செல்வது போல், பாவனை செய்து விட்டு, ஏ.டி.எம்., கண்ணாடி வழியாக, அந்த மர்ம நபரின் செயல்பாடுகளை கண்காணித்தார்.  அந்த நபர், வைத்யாவின் ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, அவரது கணக்கிலிருந்து 2,000 ரூபாய் பணம் எடுப்பதை கண்டுபிடித்தார். வேகமாக வெளியில் வந்த, அந்த மர்ம நபரை மடக்கி பிடித்தார். சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்களும், வைத்யாவின் உதவிக்கு வந்தனர். அந்த மர்மநபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், அந்த நபரின் பெயர் மிஸ்ரா என்பதும், நீண்ட நாளாக இதுபோல் நூதன கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்.,மில் பண பரிமாற்றம் முடிந்தபின், "மீண்டும் உங்கள் நடவடிக்கையை தொடர விரும்புகிறீர்களா?' என கேள்வி வரும். "ஆம்' என்ற பட்டனை அழுத்தினால், மீண்டும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்யும்படி அடுத்த கேள்வி வரும்.  வைத்யா பணம் எடுத்த ஏ.டி.எம்.,மிலும் இதுபோன்று தான் இருந்துள்ளது. வைத்யா பணம் எடுக்கும்போது, அவரின் அருகிலிருந்த மிஸ்ரா, ரகசிய குறியீட்டு எண்ணை தெரிந்து கொண்டார். வைத்யா வெளியில் சென்றதும், "மீண்டும் நடவடிக்கையை தொடர விரும்புகிறீர்களா?' என்ற கேள்வி எழுந்ததும், "ஆம்' என்ற பட்டனை அழுத்தி, படு வேகமாக வைத்யாவின் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்து, பணம் எடுத்துள்ளார்.

இதுபோன்ற தொழில்நுட்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏ.டி.எம்.,களில், முதல் பண பரிமாற்றம் முடிந்த 30 விநாடிகள் வரை, அடுத்த பண பரிமாற்றத்துக்காக மீண்டும், "கார்டு' உபயோகிக்க வேண்டிய தேவை இல்லை. 30 விநாடிகளுக்குள் ரகசிய எண்ணை பதிவு செய்தால், அதிலிருந்து பணம் எடுத்து விட முடியும்.  வைத்யா விஷயத்திலும் இது தான் நடந்துள்ளது. ஆனால், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும், இந்த நூதன திருட்டை நடத்த முடியாது. பெரும்பாலான வங்கிகளில் ஒவ்வொரு பண பரிமாற்றத்துக்கும், மீண்டும் கார்டு உபயோகிக்க வேண்டும்.  ஒரு சில வங்களில் உள்ள ஏ.டி.எம்.,களில் மட்டுமே, அடுத்த பண பரிமாற்றத்துக்கு கார்டு உபயோகிக்க வேண்டிய தேவை இருக்காது. இதுபோன்ற ஏ.டி.எம்.,களில் தான், இந்த நூதன கொள்ளை நடக்கிறது. இதுகுறித்து, அனைத்து வங்கி நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை