உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

கோபியில் சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல்

கோபி: கோபி, அயலுார் அருகே சமத்துவபுரம் பகுதியில், தேர்தல் பறக்கும்படை குழுவினர், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு காரில் சோதனை செய்ததில், திருப்பூர் மாவட்டம் குன்னத்துாரை சேர்ந்த வினோத்பாபு, 48, ஓட்டி வந்தது தெரிந்தது. காரில், ௧௦ லட்சம் ரூபாய் கொண்டு செல்வது தெரிய வந்தது. சத்தியமங்கலம் அருகே டி.ஜி.புதுாரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருவதும், நான்கு நாளாக வசூலான தொகையை, வீட்டுக்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், தொகையை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம், பறக்கும் படை குழுவினர் நேற்றிரவு ஒப்படைத்தனர். *நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 60; தனது வீட்டுக்கு டைல்ஸ், கட்டுமான பொருட்கள் வாங்க, 90 ஆயிரம் ரூபாயுடன், காரில் பரிசல் துறை நால்ரோடு அருகே நேற்று வந்தார். ஈரோடு மாவட்ட தேர்தல் நிலைக்குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை கைப்பற்றி மொடக்குறிச்சி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை