உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் கோவில் கடைகளுக்கு ரூ.4.70 கோடி வாடகை பாக்கி

ஈரோட்டில் கோவில் கடைகளுக்கு ரூ.4.70 கோடி வாடகை பாக்கி

ஈரோடு : ஈரோட்டில் ஆர்.கே.வி., சாலை மற்றும் நேதாஜி சாலைக்கு இடைப்பட்ட பகுதியில், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக கொங்கலம்மன் கோவில் வீதி பகுதியில், 46 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்த ஒப்பந்ததாரர் பலர், 2018 முதல் வாடகை செலுத்தவில்லை என தெரிகிறது. வாடகை செலுத்தும்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வந்துள்ளனர்.இந்நிலையில் வாடகை பாக்கி வைத்துள்ளவர்கள் பெயர், விபரம் போன்றவற்றை மக்களுக்கு தெரியும் வகையில் பிளக்ஸ் பேனராக வைத்துள்ளனர். மொத்தம், 46 கடைகளில் ஏழு பேர் வாடகை நிலுவை செலுத்தி விட்டனர். மற்ற, 39 கடை ஒப்பந்ததாரர், 4.70 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். தொகையை வசூலிக்க அறநிலையத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை