உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்

ஈரோடு: பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம், ஈரோட்டில் எஸ்.கே.சி., சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்தது. ஒருங்கிணைப்பாளரான தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார். பள்ளி குழந்தைகளின் பெற்றோர் பங்கேற்றனர். வரும், 31ல் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடக்க உள்ளதை முன்னிட்டு, உறுப்பினர் தேர்தல் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் மாணவர் உட்பட, 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர். தற்போது தலைவராக உள்ள ேஹமலதா, பதவியில் நேர்ந்த அனுபவங்கள், பணிகளை விளக்கினார். ஆசிரியர் பிரதிநிதி லதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் ரேவதி, பிரவீனா மற்றும் திருநாவுக்கரசு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை