உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுடுகாட்டில் கழிவுநீர்; சடலத்துடன் மறியல்

சுடுகாட்டில் கழிவுநீர்; சடலத்துடன் மறியல்

கோபி:கோபி அருகே லக்கம்பட்டி டவுன் பஞ்., உட்பட்ட கரட்டடிபாளையத்தில், இஸ்லாமிய சமூக மக்களுக்கான சுடுகாடு உள்ளது. கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 60 வயதான முஸ்லிம் முதியவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். உடலை புதைக்க சுடுகாட்டுக்கு நேற்று மதியம் சென்றனர். ஆனால், இடுகாடு வளாகத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்கியிருந்தது. இதனால் சாக்கடை வசதி கோரியும், தடுப்புச்சுவர் அமைக்க கோரியும், உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோபி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறவே, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ