உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி சாலையில் கழிவு நீர் செல்லும் அவலம்

நகராட்சி சாலையில் கழிவு நீர் செல்லும் அவலம்

குளித்தலை: குளித்தலை, ஆண்டார் தெரு மற்றும் பஜனை மடம், கடைவீதி பகுதியில் உள்ள பொது கழிவு நீர் வடிகால் துார்ந்து போனதாலும், நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளி வரும் கழிவு நீர் முழுவதும், வடிகாலில் வெளியேற முடியாமல் தாழ்வான பகுதியில் தேங்கி, சாலையில் செல்கிறது.இதேபோல், போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள பொது கழிவு நீர் வடிகால் உணவகம், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளி வரும் கழிவு நீர் வடிய, போதிய வசதி இல்லாததால், கீழமுதலியார் தெருவில் கழிவு நீர் சாலையில் வழிந்து செல்கிறது. சாலையில் செல்வோர், கழிவுநீரில் நடந்து செல்வதால் தொற்று நோய்க்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது.பொது மக்கள் நலன் கருதி, வடிகாலில் கழிவு நீர் தேங்காமல் வெளியேற்றிட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ