உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி

மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி

அந்தியூர்: அந்தியூர் யூனியன் குப்பாண்டாம்பாளையம் பஞ்., நாடார் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வெள்ளப்பாறை குட்டை ஓரத்தில், மருத்துவ கழிவு மற்றும் பிளாஸ்டிக் குப்பையை, லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். யூனியன் அலுவலகத்தில் மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் தரப்பில், போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குப்பாண்டாம்பாளையம் பஞ்., செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: நள்ளிரவில் டிப்பர் லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். தகவல் கிடைத்ததும் துாய்மை பணியாளர்களை கொண்டு, பிளாஸ்டிக் கவர், பாட்டில்களை அப்புறப்படுத்தினோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை