உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனத்துறையை கண்டித்து கடையடைப்பு

வனத்துறையை கண்டித்து கடையடைப்பு

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், தாளவாடி வனப்பகுதியில் யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழக்கின்றனர். இதை தடுக்கவும், ரயில்வே தண்டவாளங்களை பயன்படுத்தி வேலிகள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்திற்கு ஆதரவாக தாளவாடி வணிகர்கள் சங்கம், நேற்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தாளவாடி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் மகேந்திரகுமார், வணிகர் சங்க தலைவர் வெங்கடேஷன் ஆகியோர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து, தாளவாடி தாசில்தார் சுப்ரமணியத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை