உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி

சிவகிரி, பல்லடம் தோட்டத்து வீடு கொலைகளில் தொடர்புடைய கொடூரர்கள் சுற்றிவளைப்பு; முதிய தம்பதி கொலை வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி

ஈரோடு : தமிழகத்தை உலுக்கிய, தோட்டத்து வீடுகளில் தனியாக வசித்த முதிய தம்பதியரை நோட்டமிட்டு கொலை செய்த மூன்று கொடூரர்கள், திருட்டு நகையை வாங்கி உருக்கி தந்த நகை வியாபாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் பல வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.ஈரோடு மாவட்டம், சிவகிரி, விளக்கேத்தி, உச்சிமேடு, மேகரையான் தோட்டத்தில் வசித்த ராமசாமி - பாக்கியம் என்ற முதிய தம்பதியை, ஏப்ரலில் கொலை செய்து, 11 சவரன் திருடி சென்றனர். கொலையாளிகளை, 12 தனிப்படை அமைத்து போலீசார் தேடினர்.

நகைக்கடை

இந்நிலையில், பழைய குற்றவாளிகளான ஈரோடு மாவட்டம், அறச்சலுார், வீரப்பம்பாளையம் ஆச்சியப்பன், 48, ரமேஷ், 54, அறச்சலுார் மாதேஸ்வரன், 52, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இவர்களிடம் ஒரு மொபைல்போன், உருக்கிய நிலையில் நகை, மூன்று டூ - வீலர் மற்றும் இரண்டு மர கைப்பிடி, கையுறை கைப்பற்றப்பட்டன. நகையை உருக்கி கொடுத்த, பசுவபட்டி, சென்னிமலை பாளையத்தைச் சேர்ந்த ஞானசேகர், 35, நேற்று கைது செய்யப்பட்டார். இவர் சென்னிமலையில் நகைக்கடை வைத்துள்ளார்.இது தொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டி:திருப்பூர் மாவட்டம், பல்லடம், அவிநாசிபாளையம், சேமலை கவுண்டன்பாளையத்தில் வசித்த தெய்வசிகாமணி - அலமேலு தம்பதி, அவர்களின் மகன் செந்தில்குமார் ஆகியோரை 2024 நவ., 28ல் கொலை செய்து, ஐந்தரை சவரன் நகை, ஒரு மொபைல்போனை திருடி சென்றதை, கைதான மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., வசம் உள்ளது. இவர்கள் மேலும் சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது.கொலைக்கு முன், ராமசாமி தோட்ட வீட்டை, 10 நாட்களாக ரமேஷ் கண்காணித்துள்ளார். இவர்கள் மூவரும் வெவ்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2015ல் மூவர் மீதும் ஐந்து திருட்டு வழக்குகள் இருந்தன; ஒன்பது மாதம் சிறையில் இருந்தனர். அதன் பின், வழக்குகளில் இருந்து மூவரும் விடுதலையாகி விட்டனர். 2015 முதல் மூவரும் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'சிசிடிவி' கேமரா

இவர்களுடன் ஆனந்த் என்பவரும் இருந்துள்ளார். ஆனால், சிவகிரி கொலை சம்பவத்துக்கு அவர் வரவில்லை. அவரது நடவடிக்கை, செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. 'சிசிடிவி' கேமரா காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகள் பிடிபட்டனர்.தேங்காய் பறித்து, உரிக்கும் தொழிலில் ஈடுபட்ட ஆச்சியப்பன், வேலையின் போது தோட்ட வீடுகளை நோட்டம் பார்த்து, திருட்டு சம்பவங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளார். மூவரையும் விரைவில் கஸ்டடி எடுத்து, ஏற்கனவே இவர்கள் கூறிய குற்றச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கோவை டி.ஐ.ஜி., சசிமோகன், எஸ்.பி., சுஜாதா உடனிருந்தனர். பல்லடம் மூவர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருவதால், தற்போது சிவகிரி வழக்கில் கைதானவர்களை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

ஏப்., 28ம் தேதி இரவு, 10:00 மணிக்கு மேகரையான் தோட்டம் அருகே கரும்பு காட்டில் மூவரும் ஒளிந்து நோட்டம் விட்டுள்ளனர்.

நள்ளிரவு 12:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாக்கியம் வெளியே வந்துள்ளார். அப்போது மூவரும் கட்டையால் தாக்கி அவரை கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வர முயன்ற ராமசாமியையும் அதே கட்டையால் அடித்துக் கொன்று, நகைகளை திருடி தப்பியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் இவர்கள் மீது, 10 கொலை, திருட்டு வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஏப்., 28ம் தேதி இரவு, 10:00 மணிக்கு மேகரையான் தோட்டம் அருகே கரும்பு காட்டில் மூவரும் ஒளிந்து நோட்டம் விட்டுள்ளனர்.

நள்ளிரவு 12:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாக்கியம் வெளியே வந்துள்ளார். அப்போது மூவரும் கட்டையால் தாக்கி அவரை கொலை செய்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வர முயன்ற ராமசாமியையும் அதே கட்டையால் அடித்துக் கொன்று, நகைகளை திருடி தப்பியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் இவர்கள் மீது, 10 கொலை, திருட்டு வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.சிவகிரி தம்பதி கொலையை தொடர்ந்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவர்களின் உறவினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிகளை கைது செய்யாவிட்டால், மே 20 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அப்போது அறிவித்தார். தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், போராட்டத்தை ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

போலீசார் கூறியதாவது:சிவகிரி கொலை வழக்கில் சிக்கிய மூவருக்கும் பல கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புள்ளன. இதுவரை போலீசாரிடம் சிக்காமல் இருந்துள்ளனர். மூன்று பேரும் புறநகரில் உள்ள தோட்டத்து வீடுகளை நோட்டமிட்டு, தம்பதியர் தனியாக வசிப்பதை உறுதி செய்து கொள்வர். 'சிசிடிவி' கேமரா, தோட்டத்து அருகே உள்ள நீரோடை போன்றவற்றை அறிந்து, அமாவாசையன்று கொலை, கொள்ளையை செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி திட்டம் தீட்டிய பின் சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்லும் முன், சில கி.மீ., துாரத்துக்கு முன்னதாக டூ -- வீலரை நிறுத்தி, மொபைல் போன், செருப்பு ஆகியவற்றை அங்கேயே வைத்துவிடுவர். நடந்து சென்று கொலை செய்து, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வருவர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், அணிந்திருந்த ஆடைகளை கழற்றி அருகில் உள்ள நீரோடையில் வீசி சென்று விடுவர்.கைரேகைகள் பதிவாகாமல் இருக்க, 'கிளவுஸ்' பயன்படுத்தி உள்ளனர். பல்லடம் வழக்கிலும், 5 கி.மீ., முன்னதாக டூ - வீலரை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். வீட்டுக்கு வெளியே மறைந்து நின்று, சத்தம் எழுப்பி தெய்வசிகாமணியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.பின்னர், உள்ளே சென்று அலமேலு, செந்தில்குமாரை கொலை செய்து, நகை மற்றும் மொபைல் போனை திருடி சென்றனர். அங்கிருந்து பி.ஏ.பி., வாய்க்கால் வழியாக சென்று நீரோடையில் குளித்து விட்டு, மொபைல் போனை வீசி சென்றனர். மூன்று பேரையும் 'கஸ்டடி' எடுத்து விசாரித்தால், இன்னும் பல உண்மை வெளியே வர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
மே 20, 2025 09:00

குற்றவாளி கிடைக்காவிட்டால் கிடைத்தவனைக் குற்றவாளியாக்கி விடுகிறார்கள் என்பது பலப்பல ஆண்டுகளாக போலீசார் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ......


Mani . V
மே 20, 2025 08:46

இவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருந்து விட்டால் சந்தோஷம். வழக்கை மூட யாரையோ பிடித்து விட்டு, வேறு பக்கம் அந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடந்தால் பிரயோஜனம் இல்லை.


lasica
மே 20, 2025 06:44

போலீஸ் சொல்வது உண்மையானால், கால விரயம் பண்ணாமல், என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கள்.


Raj
மே 20, 2025 05:51

இந்த கொடூர குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.


Bala
மே 20, 2025 02:05

Ivanugala kandippa encounter thaan pannanum


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை