பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்ஈரோடு: லோக்சபா தேர்தலில், கொங்குநாடு வேட்டு கவுண்டர் முன்னேற்ற சங்கம், கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி, குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை, தமிழ்நாடு பண்டாரத்தர் சங்கம் உள்ளிட்டவை, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்படி ஈரோடு மற்றும் நீலகிரி, திருப்பூர் தொகுதிகளில், அக்கட்சிக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.'கவுன்டிங்' மையத்தில்48 தீயணைப்பு வீரர்கள்ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி, ஓட்டு எண்ணிக்கை மையமாக சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு, 19ம் தேதி முதல் போலீசார் சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதேசமயம் தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு நிலைய வீரர்கள், 19ம் தேதி முதல் ஜூன், 4ம் தேதி வரை பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். ஒரு தீயணைப்பு வாகனம் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். தீயணைப்பு வாகனத்தில் ஒரு ஷிப்டுக்கு 7 பேர் என, 2 ஷிப்டாக பணியில் ஈடுபடுவர். சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுபதிவு இயந்திர அறைக்கு தலா இரு வீரர்கள் என, 12 பேர் இருப்பர். இரண்டு ஷிப்டுக்கு 24 வீரர்கள் இருப்பர். தினமும், 48 தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியில் ஈடுபடுவர்.த.மா.கா.,வை ஆதரித்துஅ.ம.மு.க, பிரசாரம்ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆதரித்து அ.ம.மு.க.,வினர், ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், எம்.ஜி.ஆர் நகர், பூம்புகார் நகர், காமராஜர் நகர், தண்ணீர் பந்தல் பாளையம், காந்தி நகர், பச்சைபாலிமேடு, கனி ராவுத்தர் குளம் பகுதிகளில் நேற்று ஓட்டு சேகரித்தனர்.