உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு

கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு

கொடுமுடி: கொடுமுடியில் மகுடேஸ்வரர் கோவிலுக்கு கோவிலுக்கு செல்லும் வழியில், ஈரோடு - கரூர் பைபாஸ் சாலையில் இருந்து நகருக்குள் செல்ல பிரதான வாயிலாக ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது.இப்பகுதியில் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, யூனியன் மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள், வேளாண்மை, நெடுஞ்சாலைத்துறை, பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதனால் நுழைவு பாலம் பகுதி எப்போதும் வாகன நடமாட்டத்துடன் இருக்கும். அதிவேக வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிட்டது. இதை தடுக்க நுழைவுப்பாலம் அருகில் பைபாஸ் சாலையில் வேகத்தடை, பல்வேறு தரப்பினர் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கொடுமுடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நுழைவுப்பாலம் அருகில் இரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை