| ADDED : ஜூலை 07, 2024 02:48 AM
ஈரோடு:ஈரோடு
வ.உ.சி. பூங்கா வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு
வருகிறது. இங்கு நுாற்றாண்டு பழமையான கல் மரம், பதப்படுத்தப்பட்ட
விலங்கினங்கள், மாவட்டத்தின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்
மற்றும் அகழாய்வு பொருட்கள், நாணயங்கள், கற்குண்டுகள்,
ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் மற்றும் பழங்குடி மக்கள்
பயன்படுத்திய பொருட்கள் போன்ற விலை மதிப்பில்லாத பொருட்கள் காட்சி
படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த
மூன்று பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, -மாணவியர் நேற்று
அருங்காட்சியகத்துக்கு வந்தனர். பழங்கால பொருட்கள்,
பதப்படுத்தப்பட்ட விலங்கினங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கு காப்பாட்சியர் ஜென்சி விளக்கம்
அளித்தார்.