உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாலுகா அலுவலகத்தில் இ.வி.எம்.,கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தாலுகா அலுவலகத்தில் இ.வி.எம்.,கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலகம் உட்பட தாலுகா அலுவலகங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.லோக்சபா தேர்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோனில் பழுது நீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. கணினி முறை சுழற்சியில், அந்தந்த தொகுதிக்கான இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.ஈரோடு மேற்கு தொகுதிக்கான இயந்திரங்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திலும், கிழக்கு தொகுதிக்கான இயந்திரங்கள் மாநகராட்சி அலுவலக பாதுகாப்பு அறையிலும் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கில், 237 ஓட்டுச்சாவடிக்கு கூடுதலாக, 20 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்.,), 30 சதவீத வி.வி.பேட் என, 284 இ.வி.எம்., - 284 கட்டுப்பாட்டு இயந்திரம், 308 வி.வி.பேட், ஈரோடு மேற்கு தொகுதியில், 302 ஓட்டுச்சாவடிக்கு, 362 இ.வி.எம்.,கள், 362 கட்டுப்பாட்டு கருவிகள், 392 வி.வி.பேட், மொடக்குறிச்சியில், 277 ஓட்டுச்சாவடியில், தலா, 332 இ.வி.எம்., மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 360 வி.வி.பேட், பெருந்துறையில், 264 ஓட்டுச்சாவடியில், தலா, 346 இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 343 வி.வி.பேட், பவானியில் உள்ள, 289 ஓட்டுச்சாவடிக்கு, தலா, 346 இ.வி.எம்., - கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 375 வி.வி.பேட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்தியூரில், 262 ஓட்டுச்சாவடிக்கு, தலா, 314 இ.வி.எம்., - கட்டுப்பாட்டு கருவிகள், 340 வி.வி.பேட், கோபியில் உள்ள, 296 ஓட்டுச்சாவடிக்கு தலா, 355 இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 384 வி.வி.பேட், பவானிசாகரில், 295 ஓட்டுச்சாவடிக்கு தலா, 355 இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 384 வி.வி.பேட் என, மொத்தம், 2,222 ஓட்டுச்சாவடிக்கு, 2,663 இ.வி.எம்.,கள், 2,663 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,885 வி.வி.பேட் அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்பில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்