உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தடப்பள்ளி-அ.கோட்டை 2ம் போக பாசனங்களுக்கு

தடப்பள்ளி-அ.கோட்டை 2ம் போக பாசனங்களுக்கு

இன்று நீர் திறப்புகோபி, டிச. 11-பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த ஜூலை, 12 முதல் நவ.,8ம் தேதி வரை, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் இரண்டாம் போக பாசனத்துக்கு இன்று முதல், 2025 ஏப்.,9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க, அரசு கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை