உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரங்கை கொன்றவர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்

குரங்கை கொன்றவர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்

பவானி: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காக்காயனூர் மலை கிராமத்தில், விலங்கு வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின்படி, வெள்ளித்திருப்பூர் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சாணிமடுவு என்ற இடத்தில் நாட்டு துப்பாக்கி மற்றும் கையில் பையுடன் வந்தவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் காக்காயனுாரை சேர்ந்த மாதன், 45, என தெரிந்தது. வனத்தில் முசுக்கொந்தி எனப்படும் குரங்கை வேட்டையாட வந்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து முசுக்கொந்தி கறி, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது டி.என்.பாளையம் வனச்சரக அலுவலத்தில், யானை தந்தம் வைத்திருந்த வழக்கு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை