உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்

வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்

ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்து, பயணிகளை அச்சுறுத்திய தெருநாய்கள், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று வலை வீசி பிடிக்கப்பட்டன.இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: மாநகராட்சியில், 27 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் சோலாரில் மாநகராட்சி சார்பில், நாய்கள் கருத்தடை மையத்தில் தினமும், 40 தெரு நாய்களுக்கு நோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஜன.,12 முதல் தற்போது வரை, 1,500 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த, 20 தெருநாய்களை ஊழியர்கள் பிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை