உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போராட்ட அறிவிப்பால் தொடங்கிய சாலைப்பணி

போராட்ட அறிவிப்பால் தொடங்கிய சாலைப்பணி

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் யூனியன் கொண்டையம் பாளையம் பஞ்., கள்ளிப்பட்டி மாமல்லர் வீதியில், தார்ச்சாலை அமைக்க நான்கு மாதங்களுக்கு முன், ஜல்லிக்கற்கள் கொட்டினர். அதன் பிறகு பணி நடக்கவில்லை. இதனால் வீதியில் நடந்து செல்வதே சவாலாக மாறியது.இதனால் அவதிக்கு ஆளாகி வந்த மக்கள், அப்பகுதி அ.தி.மு.க.,வினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர். இந்நிலையில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி நேற்று தொடங்கியது. இதனால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை