உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு

காதல் திருமணம் செய்த இளம்பெண் விபரீத முடிவு

ஈரோடு: ஈரோடு, நாடார்மேடு, லெனின் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ். தச்சுவேலை செய்பவர். இவரின் மனைவி சுமதி, 27; காதல் திருமணம் செய்தவர்கள்.தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். தர்மராஜ் மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, கடந்த, 5ம் தேதி சேலையால் துாக்கிட்டு கொண்டார். வீட்டுக்கு வந்த தர்மராஜ், நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினார். துாக்கில் தொங்கி கொண்டிருந்த மனைவியை இறக்கி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.டாக்டர் பரிசோதனேயில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இந்நிலையில் சுமதியின் தாயார் விஜயலட்சுமி அளித்த புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்