உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் மலைப்பாதையில் எந்தவித தடையுமில்லை

கோவில் மலைப்பாதையில் எந்தவித தடையுமில்லை

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, படிக்கட்டு பாதை மற்றும் மலைப்பாதை என இரு வழி உள்ளது. 'தார்ச்சாலை பராமரிப்பு பணிக்காக மலைப்பாதை மூடப்பட்டுள்ளது. படிக்கட்டு பாதையைத்தான் பக்தர்கள் பயன்படுத்த வேண்டும்' என்று, சில நாட்களாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இது தவறான தகவல் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மலைப்பாதையில் தார்ச்சாலை சீரமைப்பு பணி விரைவில் நடக்கவுள்ளது. அப்படி நடந்தால் முன்கூட்டி முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்றும், திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை