உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துபாய்க்கு ஓடும் நிலை ஏற்படும்

துபாய்க்கு ஓடும் நிலை ஏற்படும்

ஈரோடு:ஈரோடு மாவட்ட அம்மா பேரவை ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் பேசியதாவது: அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவர்கள் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றனர். குடும்பம், பணத்தை பாதுகாக்கவும், வழக்கில் இருந்து தப்பிக்கவும் அ.தி.மு.க.,வை பிளவுபடுத்த நினைத்தது கனவாக சென்றது. 35 எம்.எல்.ஏ., தங்களிடம் உள்ளனர் என்று கூறியவர்கள், தற்போது ஒன்றும் செய்யமுடியாமல், மீண்டும் சேர்த்து கொள்ளுங்கள் என்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் இருந்த போதை பழக்கத்தின் அளவை, ஆறு மாதங்களில் த.வெ.க., செய்து விட்டது. ஆளும் கட்சியினர் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களாக இருக்கிறார்கள். லஞ்சம் இல்லை என்கின்றனர். ஆனால் துபாயில் சேர்க்கின்றனர். தமிழகத்தில் பிராந்தி கம்பெனியை மூடிவிட்டு கர்நாடகாவில் இருந்து வாங்கி வருகின்றனர். ஒன்றரை ஆண்டு த.வெ.க., ஆட்சி இருக்கும். பின்னர் துபாய்க்கு ஓடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.இதை தொடர்ந்து அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் கூட்டத்தில் பேசினார்.அவர் பேசுகையில், ''பெண் எஸ்.பி.யை இரவில் வீட்டுக்கு, அமைச்சர் விஜய் பாலாஜி அழைக்கிறார். மற்றொரு அமைச்சர் தன் துறைக்கே சம்பந்தம் இல்லாமல், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நள்ளிரவில் ஆய்வு செய்கிறார். மற்றொருவர் கலெக்டருக்கே மெசேஜ் அனுப்புகிறார். இதுவே ஜெ.,ஆட்சியில் நடந்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பர். கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, 8 முழம் வேட்டியை மாற்றம் வேண்டும் என்று, நான்கு முழமாக மாற்றியுள்ளார். விஜய்க்கு தற்போது பெரும்பான்மையை தக்க வைக்க வேண்டும் என்பதே கவலை. ஜெயலலிதா இருந்தவரை செங்கோட்டையனை அமைச்சராக்கவில்லை. இ.பி.எஸ்.,தான் அமைச்சராக்கினார். ஆனால் அவர் அ.தி.மு.க.,வை வீழ்த்தலாம் என்று பேசுகிறார். தாய் வீட்டை இடிக்கலாம் என்று நினைக்கலாமா? ஆயிரம் விஜய் வந்தாலும் அ.தி.மு.க.,வை வீழ்த்த முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ