உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபருக்கு வெட்டு மூன்று பேருக்கு சிறை

வாலிபருக்கு வெட்டு மூன்று பேருக்கு சிறை

ஈரோடு,:ஈரோடு வெண்டிபாளையம் கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஆறுச்சாமி, 19; காதல் விவகாரத்தில் ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் மகன் கார்த்தி, 20, என்பவரை, கத்தியால் வெட்டினார். இது தொடர்பான புகாரில் சூரம்பட்டி போலீசார், ஆறுச்சாமியை மற்றும் சம்பவத்தின்போது அவருடன் இருந்த அவரது நண்பர்களான வெண்டிபாளையம் கோணவாய்க்கால் முகேஷ், 19; கோணவாய்க்கால் கோகுல், 20, என மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ