உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டி யானை டிரோன் மூலம் விரட்டியடிப்பு

குட்டி யானை டிரோன் மூலம் விரட்டியடிப்பு

அந்தியூர்:அந்தியூர் அருகே வட்டக்காடு வனப்பகுதியை ஒட்டிய குட்டைக்கு, 10 நாட்களாக குட்டி யானை தொடர்ந்து தனியாக வருவதாக, அந்தியூர் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தந்தனர். அந்தியூர் ரேஞ்சர் நந்தினி தலைமையில் பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வனத்துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை, 10:00 மணிக்கு குட்டி யானை ஆஜரானது. சீமை கருவேல மரத்தை உலுக்கி காய்களை தின்றது. இதையடுத்து, 10:30 மணிக்கு அடர்ந்த வனப்பகுதிக்கு குட்டியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். டிரோன் மூலம் காற்றின் சத்தத்தை ஒலிக்க விட்டு, வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். மதியம், 3:00 மணிக்கு அங்குள்ள வனத்துக்குள் விரட்டப்பட்டது. தாயை பிரிந்து அல்லது தாய் இறந்ததால், அல்லது தாய் யானையே விரட்டியதால் தனியாக வந்திருக்கலாம். இதனால் வனத்துக்குள் விரட்டினாலும் குட்டி யானையை கண்காணிக்க வன ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்