உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு கபாலீஸ்வரர்கோவிலில் தீர்த்தவாரி-திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு கபாலீஸ்வரர்கோவிலில் தீர்த்தவாரி-திருக்கல்யாண உற்சவம்

ஈரோடு : ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ஈரோடு, கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த, 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 19ம் தேதி வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, தேரோட்டம் சிறப்பாக நடந்தது. நேற்று கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் சப்பரத்தில் ஏற்றி, தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.பின்னர் குளத்தின் நடுவில், அமைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபத்தில் வருணாம்பிகை, ஆருத்ர கபாலீஸ்வரர், அஸ்திர தேவர் ஆகியோருக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. அதன்பின் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அஸ்திர தேவருடன், சிவாச்சார்யார்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சுவாமிகள் மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.நேற்று மாலை கோவிலில் வருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு திருவீதி உலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை