திருக்கோவிலுார்:ஈரோடு மாவட்டம், மலையம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் வெள்ளையன் மகன் வடிவேல், 44, ஆறுமுகம் மகள் நந்தினி, 28, கோபிநாத் மனைவி அம்பிகாவதி, 40, மகள் இந்துஜா, 15, மூர்த்தி மனைவி அனிதா, 35, இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, நேற்று அதிகாலை 'டட்சன்' காரில் ஈரோட்டிற்கு புறப்பட்டனர்.காரை, குமாரசாமிபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ், 49, என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 5:50 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவண்ணாமலை தியாகதுருகம் சாலையில், பொன்னியந்தல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மீது கார் மோதியது.அதில், காரின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டனர். அதில், வடிவேல், மோகன்ராஜ் மற்றும் நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.படுகாயமடைந்த அம்பிகாவதி, இந்துஜா, அனிதா ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வேன் டிரைவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜலாலுதீன், 30, என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர்.