உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரம்பரிய விதை திருவிழா

பாரம்பரிய விதை திருவிழா

டி.என்.பாளையம்: அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பாரம்பரிய விதை திருவிழா, டி.என்.பாளையத்தில் நேற்று தொடங்கியது. இதில் பாரம்பரிய விதை, பனை ஓலை பொருள், தென்னை கைவினை பொருள், களிமண் பொம்மை, விவசாய கருவிகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி இன்றும் நடக்கிறது. கண்காட்சியை பா.ஜ., மாநில பொது செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் துவக்கி வைத்தார். நிகழ்வில் ஈரோடு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட மகளிரணி தலைவர் ரதி ராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள், விவசாயிகள், ஜே.கே.கே., விவசாய கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் மண்டல நிர்வாகிகள் செய்தனர். விழாவில் இன்று, முன்னோடி விவசாயிகளின் கருத்தரங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை