உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனுமதியற்ற டாஸ்மாக் பார்; சீல் வைக்க உத்தரவு

அனுமதியற்ற டாஸ்மாக் பார்; சீல் வைக்க உத்தரவு

ஈரோடு டாஸ்மாக் மதுக்கடை மூடிய நேரத்தில், கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறதா என்பது குறித்து, ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்துறை-கோவை சாலையில் அனுமதி பெற்ற, யு.ஆர்.சி., - ஏ.சி., பாருக்கு சென்றார். காலை, 11:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட மது வகை விற்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதித்த நேரத்துக்கு முன்பாகவும், அனுமதிக்காத மதுக்களை விற்றது தெரிந்தது. அனுமதியற்ற, 26 மது பாட்டில்களை கைப்பற்றினார். பார் ஊழியரான, சேலம், நிலவரப்பட்டி, ராஜா வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன், 27, என்பவரை கைது செய்தார். தலைமறைவான பார் உரிமையாளர் சந்திரசேகரனை தேடி வருகிறார்.இதே போல் சூளை, குப்பைகாடு ஒயின் ஷாப் அருகே அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்ற, வீரப்பன்சத்திரம், சின்னவலசு, மாரியம்மன் கோவில் வீதி மாணிக் பாஷா, 35, என்பவரை கைது செய்து, 21 மது பாட்டில்களை கைப்பற்றினர்.* ஈரோடு, வ.உ.சி.பூங்கா பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்.3583), முறையான அனுமதியின்றி பார் இயங்கி வந்தது. அதை கண்டறிந்த டி.எஸ்.பி., அனுமதியற்ற பாரை பூட்டி சீல் வைக்க வருவாய் துறைக்கு பரிந்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ