உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாலுகா ஆபீஸில் வீணடிக்கப்பட்ட தொடுதிரை தகவல் மேடை கருவி

தாலுகா ஆபீஸில் வீணடிக்கப்பட்ட தொடுதிரை தகவல் மேடை கருவி

கோபி : நிலம் சார்ந்த, பட்டா மாறுதல், சிட்டா, அ-பதிவேடு உள்ளிட்ட விபரங்களை, குறைந்த கட்டணத்தில் அறிய, அந்தந்த தாலுகா வாரியாக, முன்பு வருவாய்த்துறை சார்பில், தொடுதிரை தகவல்மேடை கருவி பயன்பாட்டில் இருந்தது.தற்போது அனைத்து விபரங்களும், ஆன்லைனில் காணும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் கோபி தாலுகாவில் பயன்பாட்டில் இருந்த தொடுதிரை தகவல் மேடை கருவி, தற்போது மரத்தடியில் கிடந்து வீணாகி வருகிறது.ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும்போதே, முறையாக பராமரித்து, பத்திரப்படுத்தியோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்கோ வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்