உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெரியசேமூரில் பெண் கொலை

பெரியசேமூரில் பெண் கொலை

ஈரோடு, ஈரோடு, பெரியசேமூர், எல்.வி.ஆர்., காலனியை சேர்ந்த மணி மனைவி கமலா, 60; மணி இறந்து விட்டார். இவர்களது மகன் புதுச்சேரியில் தனியார் வங்கியில் பணி செய்கிறார். ஈரோட்டில் உள்ள வீட்டில் கமலா தனியாக வசித்தார். விடுமுறை நாட்களில் மட்டும் தனது தாயாரை பார்க்க, மகன் வந்து செல்வார். பிற நாட்களில் தினமும் இரவு, 8:00 முதல், 9:00 மணிக்கு தாயாரிடம் பேசுவது வழக்கம். நேற்றிரவு தாயார் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் விளக்குகள் எரியாமல் இருந்த நிலையில், விளக்கை போட்டனர். அப்போது கமலா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக இறந்து கிடந்தார். இதைப்பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வீரப்பன்சத்திரம் போலீசாரும் சென்று ஆய்வு நடத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை