உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி-மகனுடன் தொழிலாளி படுகாயம்

மனைவி-மகனுடன் தொழிலாளி படுகாயம்

கோபி, கோபி அருகே இ-பைக் மீது மற்றொரு பைக் மோதியதில், மனைவி-மகனுடன் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.கோவை அருகே இரும்பாறையை சேர்ந்தவர் ராஜகோபால், 32, கூலி தொழிலாளி; இவரின் மனைவி பாரதிமஞ்சு, 28; தம்பதியின் மகன், அனீஷ், 4; இ-பைக்கில் மூவரும், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு இண்டியம்பாளையம் என்ற இடத்தில் சென்றனர். அப்போது பின்னால் வந்த ஹீரோ பேசன் பிளஸ் பைக் மோதியதில், ராஜகோபால் உட்பட மூவரும் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். மூவரும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜகோபாலின் உறவினர் ஜனா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !