உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புல் நறுக்கும் கருவி மானியத்தில் பெறலாம்

புல் நறுக்கும் கருவி மானியத்தில் பெறலாம்

ஈரோடு:கால்நடை பராமரிப்பு துறை மூலம், மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி, கால்நடை வளர்ப்போருக்கு, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இரு பசு மாடு அல்லது இரு எருமை அல்லது 20 செம்மறி ஆடு அல்லது வெள்ளாடும், 25 சென்ட் பாசன நிலமும் வைத்திருக்க வேண்டும். தங்கள் பங்களிப்பு தொகையாக, 50 சதவீதம் வழங்க வேண்டும். மாவட்ட அளவில், 200 கருவி வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோருக்கு, 45, பழங்குடியினருக்கு, 4, மற்றவர்களுக்கு, 151 கருவி வழங்கப்படும். கருவியின் விலை, 32,000 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி