உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் ஒன்றியத்தில் ரூ.10 கோடியில் சாலை பணி

சங்கராபுரம் ஒன்றியத்தில் ரூ.10 கோடியில் சாலை பணி

சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றியத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.சங்கராபுரம் ஒன்றிய பகுதியில் மைலாம்பாறை - பொய்குனம் சாலை, சேஷசமுத்திரம் கிராமத்தில் இருந்து நெடுமானுார் வழியாக பொய்குனம் வரை, அரசம்பட்டு கிராமத்தில் இருந்து பாவளம் வரை தார் சாலை பணி 10 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியது.உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணியை பூமி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், ஆத்மா குழு தலைவர் ஆறுமுகம், சங்கராபுரம் பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை, பி.டி.ஓ.,க்கள் மோகன்குமார், செல்வபோதகர், ஒன்றிய பொறியாளர் ராஜகோபால், கவுன்சிலர் தனவேல், சாந்தி, குமாரி, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்