உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம்

உளுந்துார்பேட்டை : செங்கல்பட்டு மாவட்டம், ஓமலுார் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன், 47; தனியார் பஸ் டிரைவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 55 பேருடன் 3 நாட்கள் சுற்றுலாவாக வேளாங்கண்ணி, கோடியக்கரைக்கு அழைத்துச் சென்றார். கோடியக்கரையில் இருந்த நேற்றுஅதிகாலை ஊர் திரும்பினர்.காலை 3:40 மணி யளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற லாரியை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது.இதில் பஸ் டிரைவர் மேகநாதன், மாற்று டிரைவர் ஆறுமுகம், 36; பஸ்சில் பயணித்த ஒரகடம் சேர்ந்த சக்திவேல் மனைவி திரிபுரசுந்தரி, 60; காஞ்சிபுரம் மாவட்டம், சித்தாபுரம் ஜீவரத்தினம், 53; அவரது மனைவி யசோதா, 48; உட்பட 13 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை