மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
17 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
17 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
20 hour(s) ago
கள்ளக்குறிச்சி: விமான நிலையத்தில் வேலை என கூறி ஆன் லைன் மூலம் ரூ.1.4 லட்சம் ஏமாற்றிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த லக்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன்,48; பி.இ., பட்டதாரி. கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திருச்சி விமான நிலையத்தில் பார்சல் சர்வீஸ் மேற்பார்வையாளர் பணியிடம் உள்ளதாக மொபைல் எண்ணுடன் தனியார் நிறுவன பெயரில் தகவல் பரவியது. இதனையடுத்து குமரேசன் அதிலுள்ள மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதில் பேசிய நபர் வேலை வாங்கி தருவதாக விண்ணப்ப கட்டணம், கேட் பாஸ், யூனிபார்ம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பணம் கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய குமரசேன் 7 தவணையாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணம் கட்டியுள்ளார். தொடர்ந்து நேராக சென்று பார்த்தபோது, அதுபோன்ற எவ்வித நிறுவனமும் இல்லாததும் ஆன் லைன் மூலம் பணத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து குமரேசன் கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago