உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

அரிசி கடையில் ரூ.1.50 லட்சம் கொள்ளை

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அரிசி கடை கதவை உடைத்து 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ேஷக் கனி. இவர், கடைவீதியில் கடந்த 20 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த போது கடையின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ